285 இந்தியர்கள் உள்பட 4ஆயிரம் பேர் அடங்கிய கொலைப்பட்டியல் ஐ.எஸ். வெளியிட்டது

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
285 இந்தியர்கள் உள்பட 4ஆயிரம் பேர் அடங்கிய கொலைப்பட்டியல் ஐ.எஸ். வெளியிட்டது

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ். அமைஅப்பினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்குவதில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் தீவிர ராணுவ நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர். இதற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

சிரியாவில் இயங்கிவரும் ஐ.எஸ். அமைப்பு புதிய கொலைப்பட்டியல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. இதில் 285 இந்தியர்கள் உள்பட உலகம் முழுவதும் உள்ள 4000 பேர் இடம்பெறுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் படி கொலைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்களில் பல பேர் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளோரின் பெயர் மட்டுமல்லாது, முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அரசு அதிகாரிகள் பிரபலமான இந்திய மென்பொருள் பொறியாளர்கள், நாட்டை பாதுகாக்கும் இராணுவ அதிகாரிகள் உட்பட பலர் இடம் பிடித்துள்ளனர். இந்த தகவலை ஐ.எஸ் அமைப்பு குறுந்தகவல் மூலமாகவும் பரப்பியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இதுபோன்ற ஒரு பட்டியலை ஐக்கிய சைபர் க்ரைம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது நினைவுக்கூறத்தக்கது.

மூலக்கதை