மோடி – ஜெ., சந்திப்பு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஜெயலலிதா கோரிக்கை

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
மோடி – ஜெ., சந்திப்பு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஜெயலலிதா கோரிக்கை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், கச்சத்தீவினை மீட்க வேண்டும், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை, பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

பிரதமர் மோடியை அவரது இல்லத்தில், இன்று சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக நலன் சார்ந்த 29 கோரிக்கைகள் அடங்கிய 94 பக்க கோரிக்கை மனுவினை வழங்கினார்.

பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்த கோரிக்கை மனுவில் அடங்கிய முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.

இலங்கையின் வசமுள்ள கச்சத்தீவினை மீட்க வேண்டும்.

முல்லை பெரியாறு அணையின் நீர் தேக்கத்தினை 152 அடியாக அனுமதிக்க வேண்டும்.

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஆவண செய்ய வேண்டும்.

தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட அவர்களின் படகுகளையும் உடனடியாக மீட்க வேண்டும்.

முன்னதாக, கடந்த மாதம் தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்றுக் கொண்ட முதல்வர் ஜெயலலிதா இன்று டில்லி வந்தடைந்தார். அவரை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பித்துரை, தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மூலக்கதை