பேஸ்புக் மூலம் ரூ. 2 கோடியை “ஆட்டையைப்” போட்ட பலே கில்லாடி

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
பேஸ்புக் மூலம் ரூ. 2 கோடியை “ஆட்டையைப்” போட்ட பலே கில்லாடி

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், டுவிட்டர் போன்றவைகளை மக்கள் மிகவும் ஆர்வமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மேற்கு மும்பை அருகே உள்ள பந்த்ரா பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் குவாலேவாலா (72) நாஷிக்கில் ஆட்டோமொபைல் உதிரிப்பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். ஃபேஸ்புக் மூலம், ஜோசப் என்ற நபருடன் நட்பு ஏற்பட்டது.

இடையில், தான் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வருவதாக கூறிவர், இந்தியாவில் தொழில் தொடங் முதலீடு செய்ய நம்பிக்கையான நபர் இல்லை.

எனவே, நீங்கள் என்னுடன் வியாபார பார்ட்னராக விரும்பினால், இந்திய மதிப்பில் சுமார் 3.32 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்ய வேண்டும் என ஆசை வார்த்தை காட்டியுள்ளார். இதற்கு குவாலேவாலா சம்மதம் தெரிவித்து, ஜோசப் பணத்தை எடுத்துக் கொள்ளும் வகையில் வங்கியில் பணத்தை செலுத்தினார்.

சில நாட்கள் கழித்து குவாலேவாலா ஏடிஎம் சென்டரில் சென்று பணம் எடுக்க முயன்ற போது, அவரது வங்கி கணக்கில் பணம் இல்லாதது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில், குவாலேவாலாவுடன் உள்ள அனைத்து தொடர்புகளையும் ஜோசப் நிறுத்தவிட்டார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குவாலேவாலா காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஃபேஸ்புக் மூலம் நல்ல நட்பை மட்டுமே வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நம்மவர்கள் உணர வேண்டும்.

மூலக்கதை