பிரித்தானிய மக்கள் இனி சொந்தமாக வீடு வாங்கலாம்!

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
பிரித்தானிய மக்கள் இனி சொந்தமாக வீடு வாங்கலாம்!

பிரித்தானிய நாட்டில் இயங்கி வரும் நிதி நிறுவனம் ஒன்று பொதுமக்கள் வீட்டு கடனை திருப்பி செலுத்தும் வரம்பை 85 வயது வரை உயர்த்தியுள்ளது அந்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பிரித்தானிய நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக சொந்தமாக வீடு வாங்குவது என்பது இயலாத காரியமாக இருந்து வந்துள்ளது.

வீடுகளின் விலைகள் ஒருபக்கம் அதிகரித்து வந்த நிலையிலும், அதனை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

நிதி நிறுவனங்களில் கடன் பெற்று வீடுகளை சொந்தமாக வாங்குபவர்களுக்கு ஒரு பெரும் சிக்கல் நீடித்து வந்துள்ளது.

அதாவது நாடு முழுவதும், வீட்டு கடன் பெறுபவர்கள் 75 வயதுக்கு முன்னதாகவே அனைத்து கடனையும் செலுத்த முடிந்தால் மட்டுமே அவர்களுக்கு கடன் வழங்கப்பட்டு வந்துள்ளது.

இந்த கட்டுப்பாட்டினால், 40, 50 வயதுகளை அடைந்தவர்கள் கூட சொந்தமாக வீடு வாங்க முடியாத நிலை இருந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு பிரித்தானியாவில் இயங்கி வரும் Nationwide என்ற நிதி நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் வீட்டுக் கடனை திருப்பி செலுத்தும் வரம்பை 10 ஆண்டுகள் உயர்த்தி 85 வயதாக நிர்ணயம் செய்துள்ளது.

இதன் மூலம், இந்த நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு 60 வயது இருந்தாலும் கூட, அவர்கள் புதிதாக வீட்டுக்கடன் பெற்று அடுத்து 25 ஆண்டுகளுக்கு கடனை திரும்ப செலுத்தலாம்.

பிரித்தானியாவில் வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை, குறிப்பாக வயதானவர்கள் வீடு சொந்தமாக வாங்குவதற்கு தயாராக இருப்பதனால் இந்த அதிரடி மாற்றத்தை நிதி நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் யூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும் இந்த வயது வரம்பு மாற்றம் Nationwide நிதி நிறுவனத்தை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மேலும், பிரித்தானியாவில் இயங்கி வரும் Halifax என்ற மற்றொரு நிதி நிறுவனம் வீடு மீது கடன் பெற்றுள்ள தனது வாடிக்கையாளர்கள் அதனை திருப்பி செலுத்தும் வயது வரம்பை 75-ல் இருந்து 80-ஆக அண்மையில் உயர்த்தியுள்ளதாலும், Nationwide நிதி நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும், வீட்டுக் கடன் பெறுபவர்கள் அதிக பட்சமாக 1,50,000 பவுண்ட் வரை மட்டுமே கடன் பெற இயலும் என்றும், வாடிக்கையாளர் கடன் வாங்க எண்ணும் சொத்தின் மதிப்பில் 60 சதவிகிதத்திற்கு மேல் கடன் வழங்கப்பட மாட்டாது எனவும் Nationwide நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை