ஆபிரிக்க நாடுகளுக்கு சீனா மனித இறைச்சி விற்பனை?

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
ஆபிரிக்க நாடுகளுக்கு சீனா மனித இறைச்சி விற்பனை?

சீனா நர­மா­மி­சத்தை (மனித இறைச்­சியை) பதப்­ப­டுத்­திய மாட்­டி­றைச்சி என்ற பெயரில் ஆபி­ரிக்க நாடு­க­ளி­டையே விற்­பனை செய்து வரு­வ­தாக வெளி­யான தக­வல்கள் ஆபி­ரிக்­கர்­க­ளி­டையே மிகுந்த அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதே­வேளை இத்­த­க­வலை சாம்­பி­யாவின் சீன தூது­வ­ரான யாங் யொம்மி கடு­மை­யாக மறுத்­துள்ளார்.

கடந்த சில நாட்­க­ளாக சமூக வலைத்­த­ளங்­களில், சீன­ நாட்­ட­வர்கள் மனித உடல்­களை எடுத்து அவற்றை உப்பு மற்றும் வேறு இர­சா­யனப் பதார்த்­தங்­களை கொண்டு சுத்­தப்­ப­டுத்தி பின்னர் அந்த மனித உடல்­களை துண்டு துண்­டாக வெட்டி அவற்றைப் பதப்­ப­டுத்­திய மாட்­டி­றைச்சி “Corned beef” என்ற பெயரில் ரின்னில் அடைத்து ஆபி­ரிக்க நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்து வரு­வ­தா­கவும், குறிப்­பாக இந்த இறைச்சி வகைகள் சாம்­பியா போன்ற ஆபி­ரிக்க நாடு­க­ளி­லுள்ள சூப்பர் மார்க்­கட்­டு­களில் விற்­பனை செய்­யப்­பட்டு வரு­வ­தா­கவும் சில தக­வல்கள் குறித்த படங்­க­ளுடன் தர­வேற்­றப்­பட்­டுள்­ளன.

அண்­மையில் கானாவைச் சேர்ந்த பெண்­ம­ணி­யான பார்­பரா அக்­கோ­ஷியா அபோக்­யேவும் தனது பேஸ்புக் வலைத்­த­ளத்தில் ” சீனா தற்­பொ­ழுது மனித இறைச்­சியை பதப்­ப­டுத்­திய மாட்­டி­றைச்சி எனக்­கூறி தக­ரத்தில் அடைத்து ஆபி­ரிக்­கா­வுக்கு ஏற்­று­மதி செய்­கி­றது. இதை­யிட்டு மக்கள் மிகவும் விழிப்­பாக இருக்­க­வேண்டும் என சில படங்­களை உள்­ள­டக்கி தனது தளத்தில் தர­வேற்­றி­யி­ருந்தார்.

இச்­செய்­தி­யா­னது பேஸ்­புக்கில் 26,000 இற்கும் மேற்­பட்ட தட­வைகள் பகி­ரப்­பட்­டுள்­ள­துடன், இது ஆபி­ரிக்க மற்றும் சீன மக்­க­ளி­டையே மிகவும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. பின்னர் பேஸ்புக் நிர்­வாகம் இந்­தப் ­ப­டங்­களில் நம்­ப­கத்­தன்மை குறை­வாக இருப்­ப­தா­கவும், இப்­ப­டங்கள் கிராபிக்ஸ் முறையில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தெ­னவும் கூறி தனது வலைத்­த­ளத்தில் இச்­செய்­தியை தடை­செய்­தி­ருந்­தது.

மேலும் சீன ஊட­க­மொன்றும் இது சாம்­பி­யா­வி­லுள்ள உள்­ளூர்ப்­பத்­தி­ரி­கை­யொன்று சீனர்­களின் இறைச்சி வர்த்­த­கத்தை சீர்­கு­லைப்­ப­தற்­காக இவ்­வா­றான வதந்­தி­களை பரப்­பு­கின்­ற­தென்றும் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது.

இது குறித்து கருத்து வெளி­யிட்ட சாம்­பி­யா­வுக்­கான சீன தூதுவர் யாங் யொம்மி மேற்­கு­றிப்­பிட்ட இச் செய்­தியை தான் மறுப்­ப­தா­கவும், வேண்­டு­மென்றே இவ்­வா­றான வதந்­திகள் மக்­க­ளி­டையே பரப்­பப்­ப­டு­வ­தா­கவும் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார். மேலும் இச்­செய்­தியில் எவ்­வித நம்பகத்தன்மையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஸ்நேனாப்ஸ் என்ற இணை­யத்­த­ள­மொன்றும், இப்­ப­டங்­களில் எவ்­வித நம்­ப­கத்­தன்­மையும் இல்­லை­யெ­னவும், இவை EVIL 6 என்ற வீடியோ கேமி­லுள்ள கிராபிக்ஸ் செய்­யப்­பட்ட படங்­களே எனவும் குறிப்­பிட்­டுள்­ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை