டிராம் வாகனத்தில் நபரை சரமாரியாக குத்திய கும்பல்: 6 வாலிபர்கள் அதிரடி கைது

COOL SWISS  COOL SWISS
டிராம் வாகனத்தில் நபரை சரமாரியாக குத்திய கும்பல்: 6 வாலிபர்கள் அதிரடி கைது

சுவிஸின் பேசல் மாகாணத்தில் உள்ள Schifflande என்ற பகுதியில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதே பகுதியில் இயங்கி வரும் டிராம் வாகனம் ஒன்று 8-வது வழித்தடத்தில் நேற்று அதிகாலை 5 மணியளவில் பயணமாகியுள்ளது.

இந்த வாகனத்தில் 23 வயதுடைய நபர் ஒருவரும் பயணம் செய்துள்ளார். வாகனம் புறப்பட்டு சில நிமிடங்களில் பயணிகளிடையே சிறிது சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது, 6 பேர் அடங்கிய கும்பல் ஒன்று 23 வயதான நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த கும்பலில் இருந்த ஒருவன் அந்த நபரை கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.

ஓடும் டிராம் வாகனத்தில் வாலிபர்கள் அடிதடியில் ஈடுப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பிற பயணிகள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதற்கிடையில் அவசர மருத்துவ வாகனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட, கத்தி குத்துப்பட்ட நபர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த தாக்குதலில் ஈடுப்பட்ட 17 முதல் 23 வரை வயதுடைய 6 பேரையும் பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

எனினும், இந்த தாக்குதல் எதனால் நிகழ்ந்தது என்பது பற்றி முதற்கட்ட விசாரணையில் தெரியவராததால், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் பொலிசாரை சந்திக்குமாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மூலக்கதை