விஜயகாந்த்துடன் கூட்டணியில் இணையும் தமிழ் மாநில காங்கிரஸ்?

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
விஜயகாந்த்துடன் கூட்டணியில் இணையும் தமிழ் மாநில காங்கிரஸ்?

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மக்கள் நலக் கூட்டணியில் சேரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் அதிமுக கூட்டணியில் இணைய முடிவு செய்திருந்த நிலையில், அ.தி.மு.க அணியில் ஏழு சீட்டுகள் மட்டுமே கொடுப்போம்.

அதுவும் இரட்டை இலை சின்னம்தான் என ஜெயலலிதா உறுதியாகக் கூறியதால் தற்போது மக்கள் நலக் கூட்டணியில் சேரப்போவதாகவும் இன்று விஜயகாந்தை சந்திக்க போவதாகவும் கூறப்படுகிறது.

த.மா.க வட்டாரத்தில் இதுபற்றி கூறுகையில், ஜி.கே.வாசன். கட்சி நிர்வாகிகளிடம் பேசுகையில், அ.தி.மு.கவின் முடிவுக்கு நாம் கட்டுப்பட்டால், பதினைந்து மாதம் பாடுபட்டு வளர்த்த கட்சியை நாமே அடகு வைத்ததுபோல ஆகிவிடும்.

நமகென்று ஒரு கௌரவம் இருக்கிறது. உண்மையான காங்கிரஸ் தொண்டர்களும் நம் பக்கம் இருக்கிறார்கள்.

எனவே, மக்கள் நலக் கூட்டணிதான் நம் கண்முன் பிரகாசமாக இருக்கிறது என்று கூறியதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இன்று மதியம் 3 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

பின்னர் நான்கு மணியளவில் தே.மு.திக. அலுவலகத்தில் விஜயகாந்த்தை வாசன் சந்தித்து எத்தனை தொகுதிகள், எந்தெந்த இடங்கள் என்பதைப் பற்றி இறுதி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை