எக்னெலிகொட கடத்தல் விவகாரம், கையெழுத்தினை மாற்றிய சந்தேகநபர்கள்!

தமிழ்வின்  தமிழ்வின்
எக்னெலிகொட கடத்தல் விவகாரம், கையெழுத்தினை மாற்றிய சந்தேகநபர்கள்!

ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொட காணாமல் போதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கையொப்பங்களைக் கூட மாற்றியுள்ளதாக புலனாய்வுப் பிரிவு துணைப் பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகர தெரிவித்துள்ளார்.

எக்னெலிகொட கடத்தப்பட்டசம்பவம் தொடர்பிலான சந்தேகத்தின் பேரில் இராணுவ உத்தியோகத்தர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த வழக்கு நேற்று ஹோமாகம நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணைகளின் போது முன்னிலையான புலனாய்வுப் பிரிவின் துணைப் பொலிஸ் அத்தியட்சகர் சானி அர்பேசேகர, சந்தேக நபர்கள் அப்போது பயன்படுத்திய கையொப்பத்தைக் கூட மாற்றிக்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 9ஆம் சந்தேக நபரின் கையொழுத்துக்களை பரிசோதனை செய்த போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் இராணுவ ஆவணங்களில் அவர் இட்ட கையொப்பத்தை தற்போது மாற்றிக்கொண்டுள்ளார் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்ட நிதவான் ரங்க திஸாநாயக்க, வழக்கு விசாரணைகளை 19ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

 

மூலக்கதை