கடன்பளுவில் இருந்து தப்பிக்கவே சீனாவின் கோரிக்கைகளுக்கு இலங்கை இணங்கியது!- வொய்ஸ் ஒப் அமெரிக்கா

தமிழ்வின்  தமிழ்வின்
கடன்பளுவில் இருந்து தப்பிக்கவே சீனாவின் கோரிக்கைகளுக்கு இலங்கை இணங்கியது! வொய்ஸ் ஒப் அமெரிக்கா

இலங்கை கடன் பளுக்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவே, சீனாவின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு விஜயத்தை மேற்கொண்டு அங்கு பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளார்.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்ட போட் சிட்டி திட்டமும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

இவையாவும் சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை மற்றும் இலங்கையின் கடன்படுகை, கடன் மீளச்செலுத்தல் பிரச்சினைகளில் இருந்து மீளவே இலங்கை, சீனாவுடன் உடன்படிக்கைகளுக்கு சென்றுள்ளதாக வொய்ஸ் ஒப் அமரிக்கா, ஆய்வாளர்களை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

சில ஆய்வாளர்களின் கருத்துப்படி இந்தியாவும் அமரிக்காவும் உரிய முறையில் உதவி வழங்காமைiயை அடுத்தே இலங்கை,சீனாவுடன் உறவுகளை புதுப்பிக்க நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை பொறுத்தவரை, சீனாவின் அவசரக் கடன்களுக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கு தேவையென்று கொழும்பில் உள்ள ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மூலக்கதை