ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேடஸுக்கு 200 ரூபாய்: திமுக திட்டம்?

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேடஸுக்கு 200 ரூபாய்: திமுக திட்டம்?

சமூக வலைத்தளங்களில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக பதிவேற்றுபவர்களுக்கு திமுகவினர் 200 ரூபாய் வரை வழங்குவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதையடுத்து பெரும்பாலான காட்சிகள் தங்களின் பிரசாரத்தை துவக்கியுள்ளன.

கடந்த காலங்களை போல் ஊர் ஊராக, வீதி வீதியாக மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களின் மூலமும் பிரசாரத்தை துவக்கியுள்ளன.

தங்கள் கட்சியின் நன்மைகளையும், எதிர்கட்சியின் தீமைகளையும் விளக்கி அரசியல் கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் தங்களுக்கு ஆதரவாக பதிவிடுபவர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று அண்மையில் ஒரு கட்டுரையையும்ஆடியோவையும் வெளியிட்டிருந்தது.

அதில், மும்பையை தலைமையிடமாக கொண்ட பிராண்டிங் நிறுவனம் ஒன்று, ஒரு வலைப்பதிவரிடம் “நாங்கள் தினமும், தற்போது இருக்கின்ற ஆட்சிக்கு எதிரான தகவல்கள் அடங்கிய கட்டுரையை தருவோம்.

அதை நீங்கள், அப்படியே உங்கள் வலைப்பூவில் பகிர்ந்தால் ரூ100, உங்கள் ஃபேஸ்புக்கில் பகிர்ந்தால் ரூ. 200 தரப்படும்.

அது போல் நாங்கள் ஒரு நாளைக்கு மூன்று கட்டுரைகள் தருவோம் என டீலிங் பேசுவது பதிவாகியுள்ளது. அந்த குறிப்பிட்ட நிறுவனம் திமுகவிற்கு ஆதரவாக வேலைப்பார்ப்பதாக அந்த ஆங்கில நாளிதழ் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவல் உண்மையா அல்லது பொய்யா என்பது குறித்த எந்த விளக்கமும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. #DMK200 என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ஏராளமான பயணாளர்கள் தங்களின் கருத்துகளை பதிவேற்றியுள்ளனர். இது திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத

மூலக்கதை