வங்கியில் புகுந்து மில்லியன் பிராங்குகளை கொள்ளையிட்ட நபர்: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

COOL SWISS  COOL SWISS
வங்கியில் புகுந்து மில்லியன் பிராங்குகளை கொள்ளையிட்ட நபர்: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

சுவிஸ் நாட்டை கலக்கி வந்த வங்கி கொள்ளைக்காரன் ஒருவன் கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 24ம் திகதி சூரிச் நகரில் உள்ள வங்கி ஒன்றில் புகுந்துள்ளான்.

வங்கியில் இருந்த ஊழியர்களிடம் குண்டு நிரப்பப்படாத துப்பாக்கியை காட்டி மிரட்டி 2.5 மில்லியன் பிராங்கை அள்ளிச்சென்றுள்ளான்.

இந்த சம்பவத்திற்கு பிறகு கொள்ளையனை பிடிக்க பொலிசார் தனிப்படை அமைத்து தேடி வந்துள்ளனர்.

ஆனால், கொள்ளையிட்ட பணத்தை ஆடம்பரமாக சூதாட்டங்களில் பயன்படுத்தி கொள்ளையன் செலவிட்டு வந்துள்ளான்.

இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு பெப்ரவரி 7ம் திகதி குரோசியா தீவில் இந்த வங்கி கொள்ளையன் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அவனை பொலிசார் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று சூரிச் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

சூரிச் நகர் மட்டுமின்றி சுவிஸில் உள்ள பல்வேறு நகரங்களில் மில்லியன் கணக்கில் இந்த நபர் கொள்ளையிட்டது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

எனவே, தொடர் கொள்ளைகளில் ஈடுப்பட்ட குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை