ஜெயலலிதாவுக்கு முன்னதாக பிரசாரத்தை தொடங்கிய ஸ்டாலின் (வீடியோ இணைப்பு)

NEW INDIA NEWS  NEW INDIA NEWS

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

ஆனாலும், மு.க.ஸ்டாலின் ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட சி.ஜி. காலணி, ஜெ.ஜெ. காலணி, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் வீடு வீடாக சென்று துண்டுபிரசுரங்களை விநியோகித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்துள்ளார்.

ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாளை முதல் 234 தொகுதிகளிலும் அதிமுக அரசின் அவலங்களை எடுத்துக்கூறும் திண்ணை பிரசாரம் தொடரும் என தெரிவித்துள்ளார்.

சென்னையில் நாளை முதல் ஜெயலலிதா பிரசாரத்தைத் தொடங்க உள்ள நிலையில் ஸ்டாலின் அவருக்கு முன்னதாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோ இணைப்பு

மூலக்கதை