திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி, ஒட்டப்பிடாரம், ஸ்ரீவில்லிப்புத்தூர், வாசுதேவநல்லூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய தொகுதிகள் புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சின்னம் குறித்து நாளை முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இந்த 4 தொகுதிகளும் தனித் தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை