ஜெயலலிதா குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் வாதம்

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
ஜெயலலிதா குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் வாதம்

சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றமற்றவர் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க தமது இறுதி வாதத்தில் வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் வலியுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இம்மனு மீதான இறுதிவாதத்தை முன்வைத்த ஜெயலலிதா தரப்பு மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ்,

சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் சட்டப்படி வழக்கை நடத்தவில்லை எனவும், வருமானவரி ஆவணங்களை அது பரிசீலிக்கவே இல்லை எனவும் வாதாடினார்.

ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒரே வீட்டில்தான் வசிகின்றனர் என்றபோதிலும், போயஸ் தோட்டத்தில் எந்த ஒரு நிறுவனமும் இயங்கவில்லை என அவர் தெரிவித்தார்.

மேலும் இருவரும் ஒரே வீட்டில் வசித்துவரும் நிலையில், பணப் பரிமாற்றம் நடந்ததா என விசாரணை நீதிமன்றம் ஆராய்ச்சி செய்திருப்பது அர்த்தமற்றது என்றார்.

ஆகையால் ஜெயலலிதா குற்றமற்றவர் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் தனது கடைசி வாதத்தை முன்வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கர்நாடகா அரசும் ஜெயலலிதா தரப்பும் தம்முடைய வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 19-ந் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

அன்றைய தினம் சசிகலா, இளவரசி, சுதாகரன் சார்பாக மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே ஆஜராகி வாதங்களை முன்வைக்க உள்ளார்.

மூலக்கதை