அதிமுக வேட்பாளர் பட்டியல் 5வது முறையாக மாற்றம்

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
அதிமுக வேட்பாளர் பட்டியல் 5வது முறையாக மாற்றம்

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் 5வது முறையாக இன்று மாற்றப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 227 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா கடந்த 4ம் திகதி வெளியிட்டார்.

ஏற்கனவே நான்கு முறை மாற்றம் செய்யப்பட்ட பட்டியல் தற்போது 5வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பென்னாகரம் தொகுதியில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் வேலுமணிக்கு பதிலாக புதிய வேட்பாளராக கே.பி.முனுசாமி நிறுத்தப்பட்டுள்ளார்.

அதேபோல், வெப்பனஹள்ளி தொகுதியில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கே.பி.முனுசாமிக்கு பதிலாக புதிய வேட்பாளராக மது என்கிற ஹேம்நாத் நிறுத்தப்பட்டுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, அதிமுக வேட்பாளர் பட்டியலில் 15 தொகுதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை