புகைமண்டலத்தை கிளப்பிய எரிமலை: வானில் பறந்து கொண்டே பயணி எடுத்த வியக்க வைக்கும் புகைப்படங்கள்

NEWSONEWS  NEWSONEWS
புகைமண்டலத்தை கிளப்பிய எரிமலை: வானில் பறந்து கொண்டே பயணி எடுத்த வியக்க வைக்கும் புகைப்படங்கள்

Pavlof எரிமலையானது நேற்று மதியம் வெடித்ததில், சுமார் 20,000 feet வரை காற்றில் புகைமண்டலங்களை பரப்பியதால், Aluetian தீவினை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், Dutch Harbor என்ற நகரிலிருந்து Anchorag என்ற நகருக்கு Penair விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், இந்த எரிமலையில் இருந்து வெளியான புகைமண்டலத்தை புகைப்படம் எடுக்க எண்ணியுள்ளார்.

அதன்படியே, விமானியும் எரிமலைக்கு கொஞ்சம் பக்கவாட்டில் விமானத்தை கொண்டுசெல்லவே, காற்றில் புகைமண்டலங்கள் பரவும் காட்சிகளை புகைப்படம் எடுத்துள்ளார்.

இணையதளத்தில் வெளியான இந்த புகைப்படத்தை பார்த்த அமெரிக்காவின் வானிலை ஆய்வாளர்கள், இது Pavlof எரிமலையின் புகைப்படங்கள் தான் என உறுதிப்படுத்திய பின்னர், இந்த எரிமலை வெடிப்பின் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்றும், சாம்பல் காற்றில் வேகமாக பரவுவதால் விமான போக்குவரத்துகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

4.4 மீற்றர் விட்டம் கொண்ட இந்த எரிமலை, அலாஸ்காவில் மிகத்தீவிரமாக செயல்பட்டு வரும் எரிமலைகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது, முதலிடத்தில் Shishaldin எரிமலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை