குடிபோதையில் கப்பலை தரை மேல் ஓட்டிய கேப்டன்: நிகழ்ந்த விபரீத சம்பவம்

NEWSONEWS  NEWSONEWS
குடிபோதையில் கப்பலை தரை மேல் ஓட்டிய கேப்டன்: நிகழ்ந்த விபரீத சம்பவம்

ஜேர்மனியில் உள்ள Rostock என்ற துறைமுகத்திற்கு சரக்கு கப்பல் ஒன்று வந்துள்ளது. Abis Bergen எனப்பெயரிடப்பட்ட அந்த கப்பலின் நீளம் 85 மீற்றர் ஆகும்.

ஆனால், கடலில் இருந்து வந்த கப்பல் குறிப்பிட்ட எல்லைக்குள் நிற்காமல் தரையை நோக்கி பாய்ந்து சென்று நின்றுள்ளது.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விரைவாக வந்த துறைமுக அதிகாரிகள் கப்பலில் இருந்த கேப்டனை உடனடியாக சோதனை செய்துள்ளனர்.

அப்போது, அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திருந்ததால், கட்டுப்பாடில்லாமல் கப்பலை ஓட்டியது தெரியவந்துள்ளது.

எனினும், கேப்டனின் பெயர் உள்ளிட்ட எந்த தகவலையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.

உடனடியாக ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, தரையில் மோதி நின்ற கப்பலை சிறிய படகுகளின் உதவியுடன் மீண்டும் கடலுக்கு கொண்டு விடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பேசிய பொலிசார், ‘கேப்டனின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், கேப்டன் பொறுப்பில் அவர் தொடர்ந்து நீடிப்பது ஆபத்தான விடயம்’ என கருத்து தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தில் நிகழ்ந்த இந்த விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை