ஆடு, மாடுகளை ஓட்டிச் சென்றவர்கள் மீது மணல் லாரி மோதியது: 3 குழந்தைகள், மூதாட்டி பலி

மாலை மலர்  மாலை மலர்
ஆடு, மாடுகளை ஓட்டிச் சென்றவர்கள் மீது மணல் லாரி மோதியது: 3 குழந்தைகள், மூதாட்டி பலி

நாக்பூர், மார்ச் 31-

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே மணல் லாரி மோதியதில் மூன்று குழந்தைகள் மற்றும் மூதாட்டி ஆகியோர் பலியாகினர்.

போக்குவரத்து மிகுந்த நாக்பூர்-ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நேரி கிராமம் அருகே சிலர் இன்று காலையில் ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு சென்றனர். அப்போது, அந்த வழியாக அதிவேகத்தில் வந்த மணல் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆடு மாடுகள் ஒட்டி சென்றவர்கள் மீது மோதியது. இதில் இரண்டு முதல் 7 வயது வரையுள்ள 3 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

70 வயது மூதாட்டி படுகாயம் அடைந்தார். உயிருக்குப் போராடிய அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரும் இறந்துவிட்டார். இறந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை