கேரள கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் பட்டியல்: அச்சுதானந்தன்–நடிகர் முகேஷ் சட்டசபை தேர்தலில் போட்டி

மாலை மலர்  மாலை மலர்
கேரள கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் பட்டியல்: அச்சுதானந்தன்–நடிகர் முகேஷ் சட்டசபை தேர்தலில் போட்டி

திருவனந்தபுரம், மார்ச். 31–

கேரளாவில் வருகிற மே மாதம் 16–ந் தேதி சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கும் எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி மும்மரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளில் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கம்யூனிஸ்டு கட்சி அறிவித்து உள்ளது.

வேட்பாளர் பட்டியலில் 58 பேருக்கு முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 16 பெண் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள 43 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் முன்னாள் முதல்–மந்திரியும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான அச்சுதானந்தன் மலம்புழா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதே போல பிரபல மலையாள நடிகர் முகேஷ் கொல்லம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இதே போல தர்மடம் தொகுதியில் முன்னாள் மாநில செயலாளர் பிணராய் விஜயன் போட்டியிடுகிறார். விரைவில் மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலை கம்யூனிஸ்டு கட்சியின் அமைப்பாளர் வைக்கம் விஸ்வநாதன் திருவனந்தபுரத்தில் வெளியிட்டார்.

மூலக்கதை