இந்திய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் வெற்றி

மாலை மலர்  மாலை மலர்
இந்திய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் வெற்றி

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இதன் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 21-7, 21-13 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை தன்வி லாத்தை எளிதில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் பி.வி.சிந்து(இந்தியா) 21-8, 21-8 என்ற நேர் செட்டில் சிகோக்னினியை (இத்தாலி) வெறும் 18 நிமிடங்களில் வென்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்களான சாய் பிரனீத், அஜய் ஜெயராம், ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தனர்.

மூலக்கதை