கொடைக்கானல்-பழனி சாலை வனப்பகுதியில் தீ பற்றி எரிகிறது - மரங்கள் எரிந்து நாசம்

மாலை மலர்  மாலை மலர்
கொடைக்கானல்பழனி சாலை வனப்பகுதியில் தீ பற்றி எரிகிறது  மரங்கள் எரிந்து நாசம்

கொடைக்கானல், மார்ச்.31-

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த காட்டுத்தீயை வனத்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் போராடி அணைத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு 10 மணியளவில் கொடைக்கானல் -பழனி சாலையில் பி.எல்.செட் மற்றும் அருவிக்கோடு பகுதிகளில் வனப்பகுதியில் திடீரென்று காட்டுத்தீ பிடித்தது. இந்த தீ மளமளவென அப்பகுதியில் சாலையோரத்தில் உள்ள செடிகள், மரங்களிலும் பரவியது.

இதனால் அந்த சாலையில் வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

தகவலறிந்த வனத்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் நேற்றுமுன்தினம் காலை அப்பகுதியில் தீ தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. இந்த தீ விபத்தால் வனப்பகுதியில் இருந்த மரங்கள், செடிகள் கருகி நாசமாகின.

மூலக்கதை