எதிரி சொத்து சட்ட திருத்தம் உள்ளிட்ட 2 சட்டங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்

மாலை மலர்  மாலை மலர்
எதிரி சொத்து சட்ட திருத்தம் உள்ளிட்ட 2 சட்டங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்

புதுடெல்லி, மார்ச்.31-

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு சென்றிருப்பதால், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், ஜனாதிபதி ஆட்சி நடைபெறும் உத்தரகாண்ட் மாநிலத்தில், ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு, அரசின் செலவினங்களுக்கு அரசு கருவூலத்தில் இருந்து பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த 18-ந் தேதி, உத்தரகாண்ட் சட்டசபையில், நிதி ஒதுக்க மசோதா தோற்கடிக்கப்பட்டதால், நிதி தேவைக்காக இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது.

அதுபோல், போருக்கு பிறகு பாகிஸ்தான் மற்றும் சீனாவில் குடியேறியவர்கள் இந்தியாவில் விட்டுச்சென்ற சொத்துகளை கைப்பற்றி பராமரிப்பதற்கான ‘எதிரி சொத்து சட்ட திருத்தம்‘ குறித்து கடந்த ஜனவரி மாதம் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், அதற்கான மசோதாவை டெல்லி மேல்-சபையில் நிறைவேற்ற முடியாததால், அந்த அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

மூலக்கதை