டி20 பெண்கள் உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில் நுழைய 133 ரன்கள் இலக்கு

மாலை மலர்  மாலை மலர்
டி20 பெண்கள் உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில் நுழைய 133 ரன்கள் இலக்கு

புதுடெல்லி, மார்ச் 30-

5-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. லீக் முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் இரு இடத்தை பிடித்த நியூசிலாந்து (8 புள்ளி), ஆஸ்திரேலியா (6 புள்ளி), ‘பி’ பிரிவில் முதல் இரு இடத்தை பெற்ற இங்கிலாந்து (8 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (6 புள்ளிகள்) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

இந்த நிலையில் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத சார்லோட் எட்வர்ட்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. ஆஸ்திரேலியா அணிக்காக பேட்டிங்கை தொடங்கிய அலிஸ்ஸா ஹீலியும்(25 ரன்கள்), இலிஸ் வில்லானியும்(19 ரன்கள்) நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். அதன் பிறகு களமிறங்கிய மெக் லானிங் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.

20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் மெக் லானிங் 55 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக நடாலி ஸிவேர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

133 ரன்கள் எடுத்தால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாலம் என்ற நிலையில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. 

மூலக்கதை