தவறான சிகிச்சையால் பெண் மரணம்: டாக்டர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்

மாலை மலர்  மாலை மலர்
தவறான சிகிச்சையால் பெண் மரணம்: டாக்டர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்

திண்டுக்கல், மார்ச்.30–

வேடசந்தூர் அருகில் உள்ள நாகம்பட்டி எஸ்.கே.நகரை சேர்ந்தவர் கரியப்பன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி. இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் வடமதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கிருந்த டாக்டர்கள் தங்கமணி, நாச்சிமுத்து ஆகியோர் சரஸ்வதியை பரிசோதனை செய்தனர். வயிற்றில் கட்டி இருப்பதாகவும், அதனை ஆபரேசன் செய்து அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர். கரியப்பனும் சம்மதித்தார். அதன்படி கடந்த 11.5.2007–ந் தேதி ஆபரேசன் செய்யப்பட்டது.

ஆபரேசனின்போது கவனக்குறைவாக கர்ப்பப்பை மற்றும் அதன் குழாய்களும் அகற்றப்பட்டதால் மறுநாளே சரஸ்வதி இறந்து விட்டார்.

எனவே தனக்கு நியாயம் வழங்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் 13.11.2007–ந் தேதி கரியப்பன் புகார் அளித்தார்.

விசாரணை நடந்து வந்தபோதே கரியப்பனும் இறந்து விட்டார். இதனையடுத்து அவரது மகன்களான ரெங்கநாதன், பாண்டியராஜன் ஆகியோர் மறுமுறையீடு செய்து வழக்கை நடத்தி வந்தனர்.

நுகர்வோர் நீதிமன்ற தலைவர் அய்யப்பன், உறுப்பினர்கள் மீனாம்பிகை, சேக்அப்துல்காதர் ஆகியோர் விசாரித்து சரஸ்வதிக்கு கவனக்குறைவாக சிகிச்சை அளித்த டாக்டர்கள் தங்கமணி, நாச்சிமுத்து ஆகிய இருவருக்கும் ரூ.2 லட்சம் அபராதம் மற்றும் வழக்கு செலவாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறி தீர்ப்பு அளித்தனர்.

மூலக்கதை