அர்ஜென்டினா அணிக்காக 50 கோல்கள் அடித்த இரண்டாவது வீரர் மெஸ்சி

மாலை மலர்  மாலை மலர்
அர்ஜென்டினா அணிக்காக 50 கோல்கள் அடித்த இரண்டாவது வீரர் மெஸ்சி

அர்ஜென்டினாவைச் சேர்ந்த முன்னணி கால்பந்து வீரரான லயோனல் மெஸ்சி, அந்நாட்டு அணிக்காக சர்வதேச போட்டிகளில் 50 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

2018ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டம் அர்ஜென்டினாவில் நடைபெற்றது. இதில், அர்ஜென்டினா அணி பொலிவியாவை எதிர்கொண்டது. இப்போட்டியின் 30-வது நிமிடத்தில் மெஸ்சி கோல் அடித்து அசத்தினார். இது அர்ஜென்டினா அணிக்காக அவர் அடித்த 50-வது கோல் ஆகும். இதுவரை 107 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை அவர் எட்டியுள்ளார்.

இவரது உதவியால் அர்ஜென்டினா அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகக் கோப்பை மற்றும் கோபா அமெரிக்கா தொடரின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் கேப்ரியேல் பாதிஸ்டுடா அர்ஜென்டினா அணிக்காக 50 கோல்கள் அடித்துள்ளார். இவர் மொத்தம் 78 போட்டிகளில் விளையாடி 54 கோல்களுடன் ஓய்வு பெற்றார். அதன்பின்னர் தற்போது மெஸ்சி 50 கோல் என்ற இலக்கை எட்டியுள்ளார்.

மூலக்கதை