குரோம்பேட்டையில் இன்று பா.ம.க. தேர்தல் பிரசார கூட்டம்

மாலை மலர்  மாலை மலர்
குரோம்பேட்டையில் இன்று பா.ம.க. தேர்தல் பிரசார கூட்டம்

தாம்பரம், மார்ச். 30–

பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளுக்கான பா.ம.க. தேர்தல் பிரசார கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு கோவூரிலும், 6 மணிக்கு குரோம்பேட்டை சி.எல்.சி. ரோடு பகுதியிலும் நடைபெறுகிறது.

கூட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி, மத்திய அமைச்சராக பணி செய்தபோது செய்த சாதனைகள் மற்றும் தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி அமைந்தவுடன் செய்யப்பட உள்ள திட்டங்கள் பற்றி உரையாற்றி ஆதரவு திரட்டுகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் பசுமை தாயக ஒருங்கிணைப்பாளர் ஐ.நா.கண்ணன் செய்துள்ளனர்.

மூலக்கதை