வெள்ளையின மாணவனை வழிமறைத்து கிண்டல் செய்த கருப்பின பெண்: வைரலாக பரவும் வீடியோ

NEWSONEWS  NEWSONEWS
வெள்ளையின மாணவனை வழிமறைத்து கிண்டல் செய்த கருப்பின பெண்: வைரலாக பரவும் வீடியோ

அமெரிக்காவின் San Francisco பல்கழைக்கழத்தின் வளாகத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து வெளியான வீடியோவில், Cory Goldstein என்ற வெள்ளையின மாணவர் ஒருவர் நடந்துவருகிறார், அவரை கருப்பின பெண் ஒருவர் வழிமறைத்து dreadlocks (கயிறுகள் போன்று செதுக்கப்பட்ட முடிகள்) அணியுமாறு கூறுகிறார்.

அதற்கு அம்மாணவர், இதனை நான் ஏன் அணிய வேண்டும், இது எங்களுடைய கலாச்சாரம் கிடையாது, உங்களுடைய கலாச்சாரம் தான் எனக்கூறுகிறார்.

அதற்கு அப்பெண், ஆம் எங்களுடைய கலாச்சாரம் தான், என்று கூறுகிறார், இதற்கு வெள்ளையின மாணவன், எகிப்தியர்கள் போன்று இருக்கும், நீ என்ன எகிப்தியனா? எனக்கேட்கிறார்.

அற்கு அப்பெண் எகிப்து எங்கு இருக்கிறது எனக்கேட்கிறார். ஆனால் வெள்ளையின மாணவன் அங்கிருந்து நகர்ந்து செல்கிறார், அப்பெண்ணோ அவரை மீண்டும் வழிமறைக்கிறார், ஆனால் அம்மாணவன் அப்பெண்ணை விலக்கிவிட்டு நகர்ந்து செல்கிறார்.

இந்த வீடியோவை 200,000 பேர் பார்த்துள்ளனர், இந்த சம்பவம் குறித்து Cory Goldstein தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, கலாச்சார ரீதியாக அப்பெண் என்னை தொந்தரவு செய்தார்.

இதுகுறித்து, கல்வி வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன், ஏனெனில் கல்வி அமைப்பு பற்றி அவர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக எனக்கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பல்கலைக்கழகம் கூறியதாவது, கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து பேசிக்கொள்ளலாம், ஆனால் இதுபோன்ற சம்பவங்களுக்கு நாங்கள் அனுமதியளிக்கவில்லை.

எனவே இதுகுறித்து விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக்கூறியுள்ளது.

மூலக்கதை