ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று குத்துச்சண்டை: அரைஇறுதியில் மேரிகோம், ஷிவதபா

மாலை மலர்  மாலை மலர்
ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று குத்துச்சண்டை: அரைஇறுதியில் மேரிகோம், ஷிவதபா

கியான்அன், மார்ச்.30-

பிரேசிலில் ஆகஸ்டு மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான கால் இறுதியில் 51 கிலோ உடல் எடைப்பிரிவில் 5 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரிகோம் 3-0 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை நெஸ்டி பெட்சியோவை துவம்சம் செய்து அரை இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சரிதாதேவி (60 கிலோ) 1-2 என்ற கணக்கில் வியட்நாம் வீராங்கனை லு டுயெனிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆண்களுக்கான கால்இறுதி ஆட்டங்களில் இந்திய வீரர்கள் ஷிவதபா (56 கிலோ) 2-1 என்ற கணக்கில் ஜப்பான் வீரர் அராஷி மோரிசாகாவையும், தேவேந்திரசிங் (49 கிலோ), சீன தைபே வீரர் பொ வெய் துன்னையும் சாய்த்து அரை இறுதிக்குள் நுழைந்தனர். இந்திய வீரர்-வீராங்கனைகள் அரை இறுதியில் வெற்றி பெற்றால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை