சாலையின் நடுவே ராட்சத மலைப்பாம்பு வந்தது எப்படி?: குழப்பத்தில் பொலிசார்

NEWSONEWS  NEWSONEWS
சாலையின் நடுவே ராட்சத மலைப்பாம்பு வந்தது எப்படி?: குழப்பத்தில் பொலிசார்

தெற்கு ஜேர்மனியில் உள்ள Baden-Wurttemberg மாகாணத்தை சேர்ந்த Lorch என்ற சிறிய நகரில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று இரவு 7 மணியளில் அப்பகுதி பொலிசாருக்கு அவசர தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதில், ‘சாலையின் நடுவில் மலைப்பாம்பு ஒன்று அசைவின்று படுத்துள்ளதாக’ வாகன ஓட்டிகள் தகவல் அளித்துள்ளனர்.

தகவலை பெற்ற பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 4 மீற்றர் நீளமுள்ள மலைப்பாம்பு எவ்வித அசைவின்றி படுத்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடுமையான குளிரின் காரணமாக அசைவின்றி கிடக்கிறதா அல்லது வாகனம் ஏறியதால் இறந்து கிடக்கிறதா என்பதை பொலிசாரால் உறுதி செய்ய முடியவில்லை.

உடனடியாக மருத்துவர் வரவழைக்கப்பட்ட சோதனை செய்தபோது, அந்த மலைப்பாம்பு ஏற்கனவே உயிரிழந்துள்ளதை மருத்துவர் கண்டுபிடித்துள்ளார்.

ஆனால், 4 மீற்றர் நீளமுள்ள இந்த மலைப்பாம்பு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு எப்படி வந்தது என்ற பொலிசாரின் கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

ஜேர்மனி நாட்டில் மலைப்பாம்புகள் பாதுகாக்கப்பட வேண்டிய ஊர்வன விலங்குகள் என்பதால், இதனை வீட்டில் வளர்க்க முக்கிய அனுமதிகளை பெற வேண்டும்.

சாலையின் நடுவில் மலைப்பாம்பு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அப்பகுதில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை