கொலையாளியை காட்டிக் கொடுத்த நபருக்கு கிடைத்த 1,50,000 டொலர் பரிசு: முடிவுக்கு வந்த போராட்டம் (வீடியோ இணைப்பு)

NEWSONEWS  NEWSONEWS
கொலையாளியை காட்டிக் கொடுத்த நபருக்கு கிடைத்த 1,50,000 டொலர் பரிசு: முடிவுக்கு வந்த போராட்டம் (வீடியோ இணைப்பு)

Nova Scotia மாகாணத்தில் உள்ள Halifax என்ற நகரில் தெரிசா ஒயிட் என்ற பெண்மணி தனது மகனான ரியான் ஒயிட்டுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு யூலை மாதம் 22ம் திகதி ரியான் ஒயிட்டை மர்ம நபர் சுட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் கொலையாளியை தீவிரமாக தேடி வந்துள்ளனர். ஆனால், கொலை நடந்து 3 வருடங்களாக கொலையாளியை நெருங்க கூட பொலிசாரால் முடியவில்லை.

இதனை தொடர்ந்து, ‘கொலையாளியை கண்டுபிடிக்க உதவும் நபருக்கு 1,50,000 டொலர் பரிசு வழங்கப்படும்’ என்ற அதிரடி அறிவிப்பை பொலிசார் வெளியிட்டனர்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து பெயர் வெளியிடப்படாத நபர் ஒருவர் பொலிசாரை சந்தித்து சில தகவல்களை அளித்துள்ளார். நபரிடம் பெற்ற தகவலை தொடர்ந்து கொலையாளியை பொலிசார் கைது செய்தனர்.

பொலிசார் அறிவித்ததை போன்று அந்த நபருக்கு 1,50,000 டொலர் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், அந்த நபரின் பெயர் உள்பட எந்த தகவலையும் பொலிசார் வெளியிடவில்லை.

இந்நிலையில், மகனை இழந்த தாயாரான தெரிசா ஒயிட் பரிசு வழங்கியது தொடர்பாக நேற்று முதன் முதலாக பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், ‘6 வருடங்களாக நடந்து வந்த போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. எனது மகனை கொன்ற கொலையாளியை கைது செய்தது ஆறுதல் அளிக்கிறது.

ஆனால், கொலையாளியை கண்டுபிடிக்க உதவிய நபர் யாரென்று தெரியவில்லை. அந்த நபர் என் மகனுக்கு மிகவும் நெருக்கமானவராக தான் இருக்க முடியும்.

இவ்வாறு மகனுடன் நட்பாக இருந்துக்கொண்டு இத்தனை வருடங்கள் இந்த கொலை தொடர்பாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

ஆனால், பரிசு தொகையை அறிவித்த பிறகு அந்த நபர் தானாக முன் வந்து கொலையாளி பற்றி தகவல் அளித்துவிட்டு பரிசு தொகையை பெற்று சென்றுருப்பது ஒரு சுயநலப் போக்காகவே தெரிகிறது.

அதே சமயம், கொலையாளியை கண்டுபிடிக்க உதவிய அந்த நபருக்கு முழு தொகையையும் கொடுத்ததற்கு பதிலாக அதில் ஒரு பாதியை என மகனின் குழந்தைகளுக்கு பொலிசார் கொடுத்திருக்கலாம்.

தற்போது தந்தையை இழந்து வாடும் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பொலிசார் ஏன் ஒரு தொகையை கொடுத்து உதவவில்லை?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

தெரசா ஒயிட்டின் இந்த கோரிக்கைக்கு இதுவரை காவல் துறை எந்த பதிலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை