மதுபோதையில் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற வாலிபர்கள்: நிகழ்ந்த விபரீத சம்பவம்

NEWSONEWS  NEWSONEWS
மதுபோதையில் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற வாலிபர்கள்: நிகழ்ந்த விபரீத சம்பவம்

ஜேர்மனியின் Lower Saxony மாகாணத்தில் உள்ள Braunschweig என்ற நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த புதன்கிழமை இரவு வேளையில் 22 மற்றும் 20 வயதுடைய இரு வாலிபர்கள் மதுபோதையில் ஹேனோவர் நோக்கி காரை ஓட்டிச் சென்றுள்ளனர்.

போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள அந்த நெடுஞ்சாலையில் சில கி.மீ தூரம் பயணித்ததை தொடர்ந்து திடீரென காரை சாலையின் ஓரமாக நிறுத்தியுள்ளனர்.

அங்குள்ள மதுக்கடை ஒன்றிற்கு சென்று மது பாட்டில்களை கேட்டுள்ளனர். ஆனால், இருவரும் ஏற்கனவே தலைக்கேறிய போதையில் இருந்ததால் கடைக்காரர் மது கொடுக்க மறுத்துள்ளார்.

ஆனால், அந்த நெடுஞ்சாலைக்கு மறுபுறம் மற்றொரு மதுக்கடை இருந்ததை பார்த்து அந்த சாலையை கடக்க முயன்றுள்ளனர்.

முதலில் 22 வயதான நபர் தடுமாறியவாறு நெடுஞ்சாலையை கடந்துள்ளார். இவரை பின் தொடர்ந்து 20 வயதான வாலிபர் சாலையை தள்ளாடியவாறு கடக்க முயன்றுள்ளார்.

ஆனால், துரதிஷ்டவசமாக நீளமான கார் ஒன்று அவர் மீது மோதி தூக்கி வீசியுள்ளது. சில அடிகள் தூரம் போய் விழுந்த அவர் மீது மற்றொரு கார் மோதிய பின்னர் அதனை தொடர்ந்து பின்னால் வந்த பெரிய லொறி ஒன்று அவர் மீது ஏறிச் சென்றுள்ளது.

3 கனரக வாகனங்கள் வாலிபர் மீது ஏறியதில், அவரது உடல் சிதைந்து அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிசார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, உயிரிழந்த வாலிபரின் நண்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை