35 ஆட்டங்கள் தோல்வியே காணாத குழு; பார்சிலோனா சாதனை!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
35 ஆட்டங்கள் தோல்வியே காணாத குழு; பார்சிலோனா சாதனை!

பார்சிலோனா, மார்ச் 4-

கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த ஸ்பெய்னின் சாதனையை பார்சிலோனா கால்பந்துக் குழு முறியடித்து இருக்கிறது. கடந்த 35 ஆட்டங்களில் தோல்வியே காணாத குழு என்ற புதிய சாதனையை பார்சிலோனா ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெய்ன் லீக் ஆட்டத்தில் ராயோ வெல்லெகானோ குழுவை 5-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியதன் வழி 27 ஆண்டுகால பழைய சாதனையை பார்சிலோனா முறியடித்திருக்கிறது. லீக் ஆட்டங்கள் உள்பட பல்வேறு போட்டிகளில் இதுவரை 35 ஆட்டங்களில் அது தோல்வியே காணாமல் முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆட்டத்தில் லியோனல் மெஸ்சி மூன்று கோல்களை அடித்தார். இதர இரு கோல்கலை முறையே ரக்கிடிக்ஸ் மற்றும் டூரன் ஆகியோர் அடித்தனர். அதேவேளையில் ராயோ ஆட்டக்காரர்கள் இருவர் நடுவரால் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டதால் அக்குழு மிகவும் பலவீனமாகிவிட்டது.

மூலக்கதை