எதிரிகளைச் சமாளிக்கக் கற்றுக் கொள்வீர்! ஷிகார் தவானுக்கு கேப்டன் தோனி அறிவுரை

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
எதிரிகளைச் சமாளிக்கக் கற்றுக் கொள்வீர்! ஷிகார் தவானுக்கு கேப்டன் தோனி அறிவுரை

மிர்பூர், மார்ச். 4-

இந்தியாவின் முன்னணி தொடக்க பெட்ஸ்மெனாக விளங்கும் ஷிகார் தவான், அதிக ரன்களைக் குவிக்க வேண்டும் என்பதை விட எதிரிகளின் அதிகமான பந்துகளை எதிர்கொள்ள முனைய வேண்டும் என்று கேப்டன் தோனி கருத்துரைத்துள்ளார். 

6ஆம் தேதி, இந்தியாவுக்கும் வங்காள தேசத்திற்கும் இடையே நடைபெறவிருக்கும் ஆசிய கிண்ண இறுதியாட்டத்தை கருத்தில் கொண்டு கேப்டன் தோனி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆசிய கிண்ண 20-ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காள தேசம், ஐக்கிய அரபு சிற்றரசு ஆகிய 5 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன.

இங்கு நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா-ஐக்கிய அரபு சிற்றரசு அணிகள் மோதின. இதில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு சிற்றரசு அணி 81 ரன்களுக்குள் சுருண்டது.

இந்தப் போட்டியில் ஷிகார் தவான் 20 பந்துகளை சந்தித்து 16 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஏற்கனவே, முதல் இரண்டு ஆட்டங்களில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் தோனி, இந்த ஆட்டம் குறித்துக் கருத்துக் கூறிய போது, ஷிகார் தவான் ரன் குவிப்பில் கவனம் செலுத்துவதை விட அதிக பந்துகளை சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

மேலும், ‘தவான் 25 முதல் 30 பந்துகளையாவது சந்திக்க வேண்டும். உடனடியாக அவர் அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை” என்றார்.

மூலக்கதை