ஐநா தடைக்கு பதிலடியா? மீண்டும் வடகொரியா ஏவுகணைச் சோதனை!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
ஐநா தடைக்கு பதிலடியா? மீண்டும் வடகொரியா ஏவுகணைச் சோதனை!

சியோல், மார்ச் 3-

தனது அணுவாயுத நடவடிக்கைகளுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு மன்றம் பல்வேறு தடைகளை அமல்படுத்தியுள்ள போதிலும் மீண்டும் ஏவுகணைச் சோதனையை வட கொரியா நடத்தியுள்ளது.

ஐ.நா.வின் பொருளாதார தடைகளுக்குப் பதிலடி கொடுக்கும் நோக்கில் குறுகிய தூர ஏவுகணைகளைக் கடலில் செலுத்தி வடகொரியா சோதனை நடத்தியுள்ளது.ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா அணுகுண்டு, அணு ஆயுதங்களை நீண்ட தூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறது.

தவிர அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு மன்றக் கட்டுப்பாட்டை மீறி வடகொரிய தலைவர் கிம் ஜுங் யுன் நடந்துகொள்வதால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறார்.

இதனால் அந்நாட்டின் மீது சில தடைகளும் விதிக்கப்பட்டன. இருந்தபோதிலும், பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரஜன் குண்டுச் சோதனை நடத்தி மேலும் பதற்றத்தை உருவாக்கியது வடகொரியா. இதையடுத்து வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க ஐ.நா. பாதுகாப்பு மன்றம் அண்மையில் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. 

இந்த கட்டுப்பாடுகள் தங்களை எதுவும் செய்யாது என்று ஐ.நா. அமைப்புக்கு சவால் விடும் வகையில், பொருளாதார தடை விதித்த சில மணி நேரங்களில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.பல்வேறு குறுகியதூர ஏவுகணைகளை கடலில் செலுத்தி சோதனை செய்துள்ளதாக தென்கொரியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 

மூலக்கதை