மிட்ஜிலாண்டை போட்டுத் தாக்கியது மன்.யுனைடெட் !

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
மிட்ஜிலாண்டை போட்டுத் தாக்கியது மன்.யுனைடெட் !

 கோலாலம்பூர், பிப்.26-

ஐரோப்பா லீக் கால்பந்து போட்டியில் தனது ஆவேசத்  தாக்குதல் மூலம் மிட்ஜிலாண்ட் எப்.சி. குழுவை மன்செஸ்ட்டர் யுனைடெட் 5-1 என்ற கோல்கணக்கில்  வீழ்த்தியது. முதல் கட்ட ஆட்டத்தில் 2-1 என்ற கோல்கணக்கில் தோல்வி கண்டதன் வழி ரசிகர்களின் எரிச்சலுக்கு இலக்கான மன்.யுனைடெட் குழு, அந்தத் தோல்விக்குப் பழிதீர்க்கும் வகையில் 2ஆம் கட்ட மோதலின் போது அபாரமாக விளையாடியது.

 முற்பகுதி ஆட்டத்தின் போது இரு குழுக்களும் 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலையில் இருந்தன. பிற்பகுதில் தாக்குதல்களைத் துரிதப்படுத்திய மன்.யுனைடெட், தொடர்ச்சியாக 4 கோல்களை அடித்தது. இதில் புதுமுக ஆட்டக்காரரான மார்க்கஸ் ராஸ்போர்ட் இரண்டு கோல்களை அடித்தார்.

இதன் வழி 6-3 என்ற கோல் விகிதத்தில் மன்.யுனைடெட் கடைசி 16 குழுக்களுக்கான இடத்தில் ஒன்றைக் கைப் பற்றியது. 

டோட்டன்ஹாம் வெற்றிக்கொடி! 

ஐரோப்பா லீக் மோதலில் இங்கிலாந்தின் டோட்டன்ஹாம் குழு இத்தாலியின் பியொரென்டினாவை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. கடந்த வாரம் நடந்த முதல் கட்ட ஆட்டத்தில் இரு குழுக்களும் 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலை கண்டன.

2ஆவது ஆட்டத்தில் பியொரென்டினாவை வீழ்த்தும் உறுதியுடன் களமிறங்கிய டோட்டன்ஹாம், முற்பகுதியில் 1-0 என்றகோல் எண்ணிக்கையில் முன்னிலை வகித்தது. பிற்பகுதி ஆட்டத்தில் மேலும் 3 கோல்களை அடித்து

3-0இல் வென்றது. கோல் விகிதாசாரத்தில் 4-1 என்ற எண்ணிக்கையில் டோட்டன்ஹாம் அடுத்த சுற்றுக்குத் தகுதிப் பெற்றது. 

லிவர்புல் தலை தப்பியது!

இங்கிலாந்தின் லிவர்புல் குழு கடும் போராட்டத்திற்குப் பின்னர் ஜெர்மனியின் அக்ஸ்பர்க் குழுவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

முதல் கட்ட ஆட்டத்தில் இரு குழுக்களுமே கோல் எதுவுமின்றி சமநிலை கண்டதால், சொந்த அரங்கத்தில், சொந்த ரசிகர்களின் முன்னிலையில் நடந்த 2ஆம் கட்ட ஆட்டத்தின் போது லிவர்புல் கடும் நெருக்குதலுக்கு உள்ளானது. 

ஆட்டம் தொடங்கிய 5ஆவது நிமிடத்தில் பெனால்டியைப் பயன்படுத்தி ஜேம்ஸ் மில்னர் கோல் போட்டார். அதன் பின்னர் தன்னைத் தற்காத்துக் கொள்ள வெகு சிரமப்பட்டது. கடைசி வரையில் போராடி 1-0 இல் தனது வெற்றியை அது தற்காத்துக் கொண்டது.   

மூலக்கதை