கடலுக்கு அடியில் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளும் புதுமணத் தம்பதிகள்: அதிகரிக்கும் விநோத கலாச்சாரம் (வீடியோ இணைப்பு)

NEWSONEWS  NEWSONEWS
கடலுக்கு அடியில் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளும் புதுமணத் தம்பதிகள்: அதிகரிக்கும் விநோத கலாச்சாரம் (வீடியோ இணைப்பு)

திருமணம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு முக்கிய நிகழ்வாகும். பெரும்பாலான புதுமணத்தம்பதிகள் தங்களின் திருமண நிகழ்வை என்றும் மறக்கமுடியாத பசுமையான நிகழ்வாக மாற்றுவதற்காக பல புதுமைகளை  கடைபிடிக்கின்றனர்.

விமானத்தில் திருமணம் செய்துகொள்வது, நடுக்கடலுக்கு சென்று கப்பலில் திருமணம் செய்துகொள்வது என புது முயற்சிகளையில் மேற்கொள்கின்றனர்.

அந்த வகையில் திருமணத்துக்கு அடுத்த நாள் கடலுக்கு அடியில் சென்று புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பழக்கம் புதுமணத்தம்பதிகளிடம் அதிகரித்துள்ளது.

த்ராஷ் தி டிரஸ் (Trash the Dress) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புகைப்படம் எடுக்கும் நிகழ்வை அவுஸ்திரேலியாவை சேர்ந்த பல புதுமணத் தம்பதிகள் மேற்கொள்கின்றனர்.

திருமணத்தற்கு அடுத்த நாள் மதியம் புத்தாடைகள் அணிந்தபடி கடற்கரைக்கு செல்லும் அவர்கள் கடற்கரை மணலிலும், கடலுக்கு அடியிலும் சென்று புகைப்படங்கள் எடுத்துகொள்கின்றனர்.

இது குறித்து புகைப்படக்காரர் பேஸ் என்பவர் கூறியதாவது, மக்கள் நடமாட்டம் இல்லாத கடற்கரைகளிலேயே இது போன்ற புகைப்பட நிகழ்வுகளை மேற்கொள்கிறோம்.

இதன் மூலம் எத்தகைய நெருக்கடியும் இல்லாமல் புதுமணத் தம்பதிகளால் இருக்க முடிகிறது. ஒரு மணி நேரத்தில் இந்த புகைப்பட நிகழ்வு முடிந்துவிடும்.

தம்பதிகளுக்கு இது மிகவும் மகிழ்ச்சியான தருணமாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பல்வேறு தம்பதிகள் தங்களின் திருமணத்தையே கடலுக்கு அடியில் நடத்த முயற்சி செய்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை