புதிய உத்தரவுகள் கூடாது; தேர்தல் ஆணையம் கட்டளை

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
புதிய உத்தரவுகள் கூடாது; தேர்தல் ஆணையம் கட்டளை

சென்னை, மார்ச் 2 - இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு, தமிழக அரசு புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளை அறிவிக்கக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் பதவிக்காலம் மே 22ம் தேதியோடு முடிவடைகிறது. அதற்குள் தேர்தலை நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்திற்கான சட்டமன்றத் தேர்தல் தேதி நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, தேதி பற்றிய அறிவிப்பு வெளியிட்டப்பிறகு அரசு எந்த ஒரு புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் வெளியிடக்கூடாது, அதோடு அறிவிப்பு வெளியாகிய 2 மணிநேரத்தில் கடைசியாக வெளியான திட்டத்தினைப் பற்றி விபரம் கோடிடப்பட்டு ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

தேதி அறிவிக்கப்பட்டப்பின் வரும் ஏப்ரல் 22ம் தேதிக்குப் பின் தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை