ஒசாமா சொத்துக்கள் யாருக்கு? அவரின் உயிலின் படி போருக்கு.!!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
ஒசாமா சொத்துக்கள் யாருக்கு? அவரின் உயிலின் படி போருக்கு.!!

 நியூயார்க், மார்ச். 2-

2011ஆம் ஆண்டு அமெரிக்க அதிரடிப் படை நடத்திய தாக்குதலின் போது மாண்டுவிட்ட ஒசாமா பின் லாடன், தமது 29 மில்லியன் டாலர் சொத்துகளை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்திருக்கிறார்.

அவருக்குச் சொந்தமான உயில் மற்றும் பல்வேறு ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இந்த ஆவணங்கள், பாகிஸ்தானிலுள்ள அப்போதாபாத் என்ற இடத்தில் ஒசாமா மீது தாக்குதல் நடத்திய போது கைப்பற்றப் பட்டவையாகும்.

“என்னுடைய உயில் படி தான் குடும்பத்தினர் நடக்க வேண்டும். எனது சொத்துக்களை ஜிகாத் எனப்படும் புனிதப் போருக்காக செலவிடவேண்டும்” என்று குடும்பத்தினரைக் கேட்டுக்கொண்டார்.

பணம், சூடானில் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அந்தச் சொத்து ரொக்கமாக இருக்கிறதா? அல்லது சொத்துக்களாக இருக்கிறதா? என்பது பற்றி எதுவும் தெரியவில்லை.1990ஆம் ஆண்டு தொடங்கி, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒசாமா சூடானில் வாழ்ந்தார். ஒசாமா தொடர்புடைய மேலும் சில ஆவணங்களையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. 

தன்னுடைய மனைவியின் பல்லுக்குள், தங்கள் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டும் கருவியை பல் மருத்துவர், பொருத்தியிருக்கக் கூடுமோ என ஒசாமா அஞ்சுவதாக குறிப்பிட்டுள்ள கடிதமும் இதில் அடங்கும். மேலும், செப்டம்பர் 11ஆம் தேதி நடத்தப்பட்ட உலக வர்த்தக மையக் கட்டடம் மீதான தாக்குதலின் 10ஆம் ஆண்டு நிறைவை, செய்தியுலகப் பிரசாரத்திற்குப் பயன்படுத்தும் பெரும் திட்டத்தை வகுப்பது குறித்தும் ஒசாமாவின் ஆவணம் ஒன்று விளக்குகிறது.

மூலக்கதை