‘கெப்பிட்டல் ஒன்’ கிண்ணம்: லிவர்புல் வீழ்ச்சி! சாம்பியனானது மன்செஸ்ட்டர் சிட்டி!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
‘கெப்பிட்டல் ஒன்’ கிண்ணம்: லிவர்புல் வீழ்ச்சி! சாம்பியனானது மன்செஸ்ட்டர் சிட்டி!

 லண்டன், பிப்.29-

அரபுக் கோடீஸ்வரருக்குச் சொந்தமான மன்செஸ்ட்டர் சிட்டி கால்பந்துக் குழு “கெப்பிட்டல் ஒன்” கிண்ண இறுதி ஆட்டத்தில் லிவர்புல் குழுவை 3-1 என்ற பெனால்டி கோல்களில் வென்று சாம்பியனானது.

வழக்கமான ஆட்ட நேரத்தில் இரு குழுக்களும் 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலையில் இருந்தன. கூடுதல் நேரம் வழங்கப்பட்ட பின்னரும் இரு குழுக்களும் கோல் எதுவும் அடிக்காததால் பெனால்டிகள் மூலம் முடிவு தீர்மானிக்கப்பட்டது.

முதன்மைக் கோல்கீப்பரான ஜோ ஹார்ட்டிற்குப் பதிலாக, 34 வயதுடைய அர்ஜெண்டினா கோல்கீப்பர் வில்லி கப்பெல்லெரோவை களத்தில் இறக்கிவிட்டிருந்தார் மன்.சிட்டி நிர்வாகி பெலெக்ரினி அவரது இந்தத் துணிகரமான முடிவுக்கு நல்ல பலன் கிடைத்தது.

 லிவர்புல் குழுவைச் சேர்ந்த லுக்காஸ், பிலிப் கொவ்டினோ, மற்றும் அடாம் லால்லானா ஆகியோர் அடித்த பெனால்டிகளை வில்லி தடுத்து நிறுத்தி மன்.சிட்டிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

இதன்வழி மன்.சிட்டி, கெப்பிட்டல் ஒன் கிண்ண சாம்பியன் பட்டத்தை வாகைசூடியது. அதே வேளையில் பிரிமியர் லீக் சாம்பியன் பட்டத்திற்கும் அது குறிவைத்திருக்கிறது.

“நாங்கள் தோற்றிருந்தாலும், நிமிர்ந்து நிற்போம். அடுத்தடுத்த போட்டிகளில் நாங்கள் மீண்டெழுந்து தாக்குதல் தொடுப்போ” என்றார் லிவர்புல் நிர்வாகி ஜர்ஜென் குளோப்.

“சாம்பியன் பட்டத்தை வெல்வது என்பது ஒரு சிறப்பு வாய்ந்த மகிழ்ச்சி” என்று மன்.சிட்டி நிர்வாகி பெல்லெக்ரினி குறிப்பிட்டார்.

கோலடிப்பதற்குக் கிடைத்த பல வாய்ப்புக்களை நழுவவிட்டபோது தாம் மிகவும் கவலையடைந்ததாக அவர் சொன்னார். 

மூலக்கதை