இந்தியாவிலேயே தயாராகும் உலகின் மலிவான ‘Smart phone’! விலை 251 ரூபாய்

NEW INDIA NEWS  NEW INDIA NEWS

இந்தியாவில் ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனம் இன்று 251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் ஒன்றை வெளியிட உள்ளது.

உலகளவில் ஸ்மார்ட்போன் பயனாளிகளை அதிகம் கொண்ட நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது.

இந்நிலையில், நொய்டாவில் உள்ள ரிங்கிங் பெல்ஸ் என்ற மொபைல் போன் நிறுவனம், 500 ரூபாய்க்கு குறைவான விலையில் ஸ்மார்ட் போனை வெளியிடப்போவதாக அறிவித்தது.

இதற்கு முன்னதாக 2,999 ரூபாய்க்கு 4G ஸ்மார்ட் போன் ஒன்றை இந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் ரூ.1,500 வரை விலையில்யிலான ஸ்மார்ட் போன்கள் சந்தையில் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் முதல் ஆலை, இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் பாகங்களைக் கொண்டு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுவரும் முயற்சிகளின் தொடர்ச்சியாகவும், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலமும் இதை அறிமுகப்படுத்துகிறோம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்நிலையில், Freedom 251 என பெயரிடப்பட்டிருந்த 500 ரூபாயில் வெளியிடப்படும் ஸ்மார்ட் போன் பற்றிய தகவல்கள் சற்று முன் வெளியாகியுள்ளது.

அதன் விலை எதிர்பார்த்த 500 ரூபாயை விட மிகக்குறைவு. Freedom 251 ஸ்மார்ட்போனின் விலை வெறும் 251 ரூபாய் மட்டுமே என தகவல் வெளியாகியுள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

ஏனெனில் அந்த ஸ்மார்ட் போன், 4 இன்ச் அளவு தொடு திரை, 3.2 மெகா பிக்சல் பின் பக்க கமெரா, 0.3 மெகா பிக்சல் முன்பக்க கமெரா, 3G வசதி, 1.3GHz quadcore ப்ராசசர், 1450 mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்கு தளத்துடன் வெளியாக உள்ளது.

டெல்லியில் நடக்கும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் விழாவில், பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

மூலக்கதை