தொடர்ந்து கடும் சரிவை நோக்கிச் செல்லும் இந்திய பங்குச்சந்தைகள்

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
தொடர்ந்து கடும் சரிவை நோக்கிச் செல்லும் இந்திய பங்குச்சந்தைகள்

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக கடும் சரிவை சந்தித்து வருகின்றன.

கடந்த 2014-ம் ஆண்டு மே 30-ம் திகதிக்கு பிறகு 7200 புள்ளிகளுக்கு கீழே நிப்டி முதல்முறையாக வர்த்தகத்தின் இடையே சரிந்தது.

வர்த்தகத்தின் இந்த வாரத்தில் இதுவரை 3.7 சதவீதம் குறியீடுகள் சரிந்தன.

முன்னதாக கடந்த ஜனவரி முதல் வாரத்தில் 4.5 சதவீதம் அளவுக்கு ஒரே வாரத்தில் பங்குச்சந்தைகள் சரிந்தன.

குறிப்பாக பொதுத்துறை வங்கிப்பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் டிசம்பர் காலாண்டில் நஷ்டத்தை சந்தித்துள்ளன.

வாராக் கடனுக்கு ஒதுக்கீடு செய்த தொகைகள் அதிகரித்ததால் பொதுத்துறை வங்கிகள் மூன்றாம் காலாண்டில் நஷ்டமடைந்ததால் அந்த பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன.

சர்வதேச அளவில் சீனாவின் நிலைமை கவலைக்குரியதாக இருக்கிறது.

அதேபோல பொதுத் துறை வங்கிகளின் நிலைமையே பங்குச்சந்தைகள் சரிய காரணம் என பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை