அஸ்டன் விலாவை வேரோடு சாய்த்தது லிவர்புல்!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
அஸ்டன் விலாவை வேரோடு சாய்த்தது லிவர்புல்!

லண்டன், பிப்.15-

அண்மைய ஆட்டங்களில் தோல்வியை தழுவியதால் துவண்டு போயிருந்த லிவர்புல் குழு, அஸ்டன் விலாவை அதன் சொந்த அரங்கத்தில் வேரோடு சாய்த்தது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் லிவர்புல் குழுவின் முன்னணி ஆட்டக்காரரான டேனியல் ஸ்டுரிட்ஜ், இந்த ஆட்டத்தில் விளையாடினார்.

லிவர்புல் குழுவை வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தும் உத்வேகத்துடன் அஸ்டன் விலா களத்தில் இறங்கியது என்றாலும், ஆட்டம் தொடங்கிய 16ஆவது நிமிடத்திலேயே ஸ்டுரிட்ஜ் முதலில் கோலை அடித்தார்.

அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் லிவர்புல் வீரர் ஜேம்ஸ் மில்னர் 2ஆவது கோலைப் போட்டார். இதன் பிறகு அஸ்டன் விலாவின் ஆட்டத்தில் சோர்வு தென்பட்டத் தொடங்கியது.

அடுத்து எம்ரே கேன் (58ஆவது நிமிடம்), டிவோக் ஒரிஜி (63ஆவது நிமிடம்) நேத்தனியல் கிளய்ன் (65ஆவது நிமிடம்) மற்றும் கோலோ டூரே (71ஆவது நிமிடம்) ஆகியோர் மாறி மாறி கோல் அடித்து, கோல் எண்ணிக்கையை அரை டஜனாக உயர்த்தினர்.

 

1983ஆம் ஆண்டுக்குப் பிறகு அஸ்டன் விலா தனது சொந்த அரங்கில் 6 கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருப்பது இதுவே முதன் முறையாகும் என்பதால் இதன் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாயினர்.

மூலக்கதை