சிசோடியாவின் வீட்டின் முன் குப்பைகளை கொட்டிய துப்புரவு பணியாளர்கள்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
சிசோடியாவின் வீட்டின் முன் குப்பைகளை கொட்டிய துப்புரவு பணியாளர்கள்

நான்கு மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து, வேலை நிறுத்தம் செய்துவரும் டெல்லி மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், அம்மாநில துணை முதலமைச்சர் சிசோடியாவின் வீட்டின் முன் குப்பைகளை கொட்டி இன்று போராட்டம் நடத்தினர். 

தலைநகர் டெல்லி 3 மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இங்கு பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

3 மாநகராட்சியும் பாரதிய ஜனதா கட்சியின் வசம் உள்ளதால், கெஜ்ரிவால் அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக, பாதிக்கப்பட்ட பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இந்நிலையில், ஊதியம் வழங்காததைக்கண்டித்து, டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியாவின் வீட்டின் முன்பு குப்பைகளை கொட்டி, துப்புரவு பணியாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர். 

உடனடியாக சம்பளம் அளிக்காவிட்டால், டெல்லி மாநகராட்சியில் பணிபுரியும் 13,000 ஊழியர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் எச்சரித்தனர். 

மூலக்கதை