திமுக தொகுதி என்பதால் இலவச பொருட்கள் கிடைக்காத நிலை; திருவட்டார் மக்கள் போராட்டம் ( படங்கள் )

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (16:52 IST)

மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (16:52 IST)

திமுக தொகுதி என்பதால்

 இலவச பொருட்கள் கிடைக்காத நிலை; 

திருவட்டார் மக்கள் போராட்டம்


குமரி மாவட்டம் திருவட்டார் பேரூராட்சியில் இன்று அரசு இலவச பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  இதை நம்பி காலையில் இருந்தே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.  மாலை வரை எதிர்பார்த்தும் இலவச பொருட்கள் வழங்கப்படாததால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அதில் சிலர் அருகில் இருந்த குடிநீர் தொட்டி மீது ஏறி நின்று அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.  இதைத்தொடர்ந்து அங்கு வந்த பத்மநாதன் தொகுதி திமுக எம்.எல்.ஏ.  புஷபலீலா ஆல்பன் தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்றவர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தினார்.  பேச்சுவார்த்தையில் அந்த மக்கள், இலவச பொருட்கள் எப்போது கிடைக்கும்? என்று கேட்டனர்.  அதற்கு அவர்,  இது திமுக பேராட்சி என்பதால், அரசு இந்த பகுதியை புறக்கணிக்கிறது.  அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறியதால் மக்கள் களைந்து சென்றனர்.

- மணிகண்டன்

மூலக்கதை