இறுதி மோதல்களில் ‘யுத்த சூனியப் பிரதேசம்’ என்று எதுவும் இருக்கவில்லை: பரணகம ஆணைக்குழு

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
இறுதி மோதல்களில் ‘யுத்த சூனியப் பிரதேசம்’ என்று எதுவும் இருக்கவில்லை: பரணகம ஆணைக்குழு

Thursday, 28 January 2016 08:42

இறுதி மோதல்களின் போது யுத்த சூனியப் பிரதேசம் என்ற எந்தப் பகுதிகளும் காணப்படவில்லை என்று காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

“இறுதி மோதல்களின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள், ஒருபோதும் யுத்த சூனியப் பிரதேசத்துக்கு இணங்கியிருக்கவில்லை. எனவே, யுத்த சூனியப் பிரதேசத்தை இராணுவம் தாக்கியது என்று கூறப்படுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. யுத்த சூனியப் பிரதேசம் என்ற ஒன்று ஒருபோதும் இருக்கவில்லை” என்று பரணகம ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, இறுதி மோதல்களின் போது, பொதுமக்கள் 40,000 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுவது புனைவு என்றும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

மூலக்கதை