​இலங்கை செல்கிறார் சுஷ்மா - மீனவர் பிரச்னை குறித்து பேச்சு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​இலங்கை செல்கிறார் சுஷ்மா  மீனவர் பிரச்னை குறித்து பேச்சு

வரும் 5-ம் தேதி இலங்கை செல்லும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரு நாட்டு மீனவர்கள் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்பில் இந்தியா - இலங்கை கூட்டு ஆணையக் கூட்டம் வரும் 5 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுகும், அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்தியா, இலங்கை மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இருநாட்டு மீனவர்கள் பரஸ்பரம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவது குறித்தும், எல்லை தாண்டும் மீனவர்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும் இரு தரப்பினரும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

கொழும்பு பயணத்தின் போது, இலங்கை அதிபர் மைத்திரிபாலா சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்துப் பேச உள்ளார்.  

பிப்ரவரி 6ம் தேதி யாழ்ப்பாணம் செல்லும் சுஷ்மா ஸ்வராஜ், அங்கு இந்தியாவின் நிதி உதவியில் கட்டப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கையும் திறந்து வைக்க உள்ளார். 

மூலக்கதை