இலங்கையின் புதிய அரசும் மனித உரிமைகளைக் காப்பாற்றுவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
இலங்கையின் புதிய அரசும் மனித உரிமைகளைக் காப்பாற்றுவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Thursday, 28 January 2016 04:40

துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் இராணுவத்தினர் உள்ளிட்ட படையினர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படும் கலாசாரத்துக்கு முடிவுகட்டுவதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதனையும் இலங்கையின் புதிய அரசாங்கம் எடுக்கவில்லை என மனித உரிமை கண்காணிப்பகம், தனது 2015ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "படையினர் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படுவதை நிறுத்துவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எதனையும இலங்கையின் புதிய அரசாங்கம் எடுக்கவில்லை.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் சித்திரவதை நடவடிக்கைகளையும் இலங்கை அரசு முடிவுக்கு கொண்டு வரவில்லை. இந்த அறிக்கை தயாரிக்கப்படும் வரை பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை. பலர் தொடர்ந்தும் இந்த சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் தொடர்ந்தும் சித்திரவதைகளை மேற்கொள்கின்றனர். வாக்குமூலங்களை பெறுவதற்காகவும் தனிப்பட்ட பகைகளுக்காகவும் கைதுசெய்யப்பட்டவர்களை பொலிஸார் துன்புறுத்துகின்றனர்." என்றுள்ளது.

மூலக்கதை