மத சக்திகளைக் கட்டுப்படுத்த ​மலேசிய பிரதமருக்கு அளிக்கப்பட்டது 4,500 கோடி : சவுதி

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
மத சக்திகளைக் கட்டுப்படுத்த ​மலேசிய பிரதமருக்கு அளிக்கப்பட்டது 4,500 கோடி : சவுதி

மலேசியாவில் மத அடிப்படைவாத சக்திகளின் ஆதிக்கத்தைக் குறைக்கவே சவுதி அரேபிய மன்னர் பிரதமர் Najib Razak-க்கு சுமார் 4,500 கோடி ரூபாயைப் பரிசாக அளித்ததாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 4,500 கோடி ரூபாய் அரசு நிதியைக் கையாடியதாக மலேசிய பிரதமர் Najib Razak-ன் மீது கடந்த ஆண்டு புகார் எழுந்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரை இந்த நிதி அரசுக் கணக்கிலிருந்து Najib Razak-ன் சொந்த வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

ஆனால், அந்த நிதி முழுவதும் சவுதி அரேபிய மன்னர் அளித்த நன்கொடை என பிரதமர் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் நடந்த விசாரணையின் இறுதியில், ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து Najib Razak விடுவிக்கப்பட்டார். 

இந்நிலையில், எகிப்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியின் ஆதிக்கம் மலேசியாவில் அதிகரித்ததாகவும், இதனால் தீவிரவாத அச்சம் எழுந்ததால், அதைச் சரி செய்வதற்காகவே சவுதி அரேபிய இந்த நன்கொடையை அளித்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தேர்தலில் Najib Razak வெற்றி பெற்றால் தான் சவுதி அரேபியாவின் எண்ணம் நிறைவேறும் என்பதால் அப்போதைய சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா இந்த தொகையை நன்கொடையாக அளித்ததாகவும் புதிய செய்திகள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை