இந்திய கொடியை வீட்டில் பறக்க விட்ட கோலியின் பாகிஸ்தான் ரசிகர் கைது

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
இந்திய கொடியை வீட்டில் பறக்க விட்ட கோலியின் பாகிஸ்தான் ரசிகர் கைது

இந்திய கொடியை வீட்டில் பறக்க விட்ட விராட் கோலியின் பாகிஸ்தான் ரசிகர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பஞ்சாப் மாகாணத்தின் ஒகாரா மாவட்டத்தை சேர்ந்த உமர் ட்ரஸ் வீராட் கோலியின் தீவிர ரசிகர். கோலியின் படத்தை வீட்டில் ஒட்டி வைத்திருந்ததோடு மட்டும் அல்லாமல், இந்தியாவின் தேசியக் கொடியையும் வீட்டின் மீது பறக்கவிட்டுள்ளார். 

இதனால் அவரது வீட்டை சோதனை செய்த காவல்துறையினர் வீராட் கோலியின் படத்தையும், இந்திய தேசியக் கொடியையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் பொது ஒழுங்கு பராமரிப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

பின் காவல்துறையின் விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் கைது செய்யப்பட்டது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய உமர் ட்ரஸ் “நான் விராட் கோலியின் மிகப் பெரிய ரசிகன் என்றும். வீராட் கோலிக்காகத்தான் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்தேன் என்றும் கூறியுள்ளார். 

மேலும் இந்திய அணிக்கு தன்னுடையை அன்பை வெளிப்படுத்தும் விதமாகவே இந்திய கொடியை வீட்டின் மேல் பறக்கவிட்டதாகவும், தான் இந்திய உளவாளி இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

மூலக்கதை