ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பின்தங்கிய தென்னாப்ரிக்க அணி

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பின்தங்கிய தென்னாப்ரிக்க அணி

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசையில் தென்னாப்ரிக்க அணி மூன்றாவது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில், இங்கிலாந்துக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இருப்பினும், 2-1 என இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. இந்த தொடருக்கு முன்பாக ஐ.சி.சி. டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தென்னாப்பிரிக்க அணி, இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இழந்ததன் மூலம் 109 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. 

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்ரிக்க அணி முதலிடத்தை இழந்துள்ளது. இந்திய அணி 110 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணி 109 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளது. 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை